ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் மகன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
23 வயதான இராஜாங்க அமைச்சர் ஒருவரின் மகன் நேற்று (02) இரவு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சொகுசு கார், களுபோவில பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேசகநபர்களை அடையாள அணிவகுப்பில் உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (02) அதிகாலை, வௌியாட்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ராகம வைத்திய பீடத்தின் 04 மாணவர்கள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.