ஓய்வூதியகாரர்களுக்கு கொடுப்பனவு 2,500 ரூபாவாக அதிகரிப்பு ; முதியோர் கொடுப்பனவு 3,000/- ரூபாவாக அதிகரிப்பு
முதியோர் கொடுப்பனவு 1000 ரூபாயில் இருந்து 3,000/- ரூபாயாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது வரவு செலவு திட்ட உரையில் கூறியுள்ளார்.
கர்ப்பிணிகளுக்கான மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு 10ஆயிரம் வரை அதிகரிக்க எதிர்பார்க்கிறோம்.
ஓய்வூதியர்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 2500 ரூபாய்வரை அதிகரிக்கப்படும்.
பெருந்தோட்ட மக்களுக்கு முழுமையான காணி உரிமையை வழங்க திட்டமிட்டுள்ளோம். அதற்காக 4 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும்.
தோட்ட மக்களுக்கு காணி உரிமை – 4 பில்லியன் ஒதுக்கீடு
பெருந்தோட்ட மக்களுக்கு முழுமையான காணி உரிமையை வழங்க திட்டமிட்டுள்ளோம். அதற்காக 4 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும்.
அரச ஊழியர்களுக்கு 10ஆயிரம் ரூபா சம்பளம் அதிகரிப்பு ஜனாதிபதி அறிவிப்பு
இது தேர்தல் வரவு – செலவு திட்டம் என்கின்றனர். அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதால் அதிகளவான சலுகைகள் இந்த வரவு – செலவு திட்டம் வழங்கப்படும் என்கின்றனர்.
2015ஆண்டுக்கு பின் அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட வில்லை. அரச ஊழியர்களின் எண்ணிக்கை 1.5 மில்லியன் ஆக உள்ளது.
அவர்களுக்கான வாழ்க்கைச்செலவு கொடுப்பனவு 7500 ரூபாதான் வழங்கப்படுகிறது. அதனை 17500 ரூபாவாக அதிகரிக்கிறோம். 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் இந்த தொகை வழங்கப்படும்.
அரசியலை விட நாட்டைப் பற்றி சிந்தித்து செயல்பட வேண்டும்
அரசியல் நோக்கங்களுக்காக மாயைகளைப் பரப்புவதை நிறுத்துமாறும், அரசியலை விட நாட்டைப் பற்றி சிந்தித்து நாட்டை உயர்த்துவதற்கு அனைவரும் தம்மை உண்மையாக அர்ப்பணிக்குமாறும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார்.
இதுவரையான பயணத்தின் வெற்றிக்கு அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டமே காரணம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதன் ஊடாக 2022 ஆம் ஆண்டைப் போன்று பொருளாதார நரகத்தில் வீழ்ந்துவிடாமல் முன்நோக்கிச் செல்வதற்கு அடித்தளமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அரச ஊழியர்களின் சம்பளத்தை நினைத்தவுடன் அதிகரிக்க முடியாது
மிகவும் நெருக்கடியான நாட்டையே நான் பொறுப்பேற்றுக்கொண்டேன். நாடு பொருளாதார ரீதியாக அனைத்து மட்டத்திலும் தோல்விகண்டிருந்தது.
தற்போது பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
அரச ஊழியர்களின் சம்பவத்தை நினைத்தவுடன் அதிகரிக்க முடியாது. சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்றால், வரியை அதிகரிக்க வேண்டும்.
அரச வரியை அதிகரிப்பதிலும் எதிர்ப்புகள் உள்ளன. அரச கட்டமைப்பபை வலுப்படுத்த வரி வருமானத்தை அதிகரிப்பது அவசியமாகும்.
93 மில்லியன் அரச ஊழியர்களுக்கு தற்போது அவசியமாகும்.