வரவு – செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகை 2 ஆயிரத்து 851 பில்லியன் ரூபா

Date:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்திற்கு அமைய 2024 ஆம் ஆண்டில் அரச வருமானம் 4 ஆயிரத்து 172 பில்லியன் ரூபாவாகும்.

அரசின் மொத்தச் செலவீனம் 6 ஆயிரத்து 978 பில்லியன் ரூபாவாகும். இதற்கிணங்க, வரவு – செலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகை 2 ஆயிரத்து 851 பில்லியன் ரூபாவாகும்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டமை இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட முக்கிய நிவாரணமாகும்.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரவு – செலவுத் திட்ட யோசனையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அவர் சமர்ப்பித்த இரண்டாவது வரவு – செலவுத் திட்டம் இதுவாகும்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விவாதம் நடைபெறவுள்ளது.

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 21 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

வரவு – செலவுத் திட்டக் குழுநிலை விவாதம் அல்லது வரவு – செலவுத் திட்டம் தொடர்பிலான மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் டிசம்பர் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

வரவு – செலவு திட்டக் குழுநிலை விவாதம் எனப்படுகின்ற மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...