நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (04) ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்படுவாரா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முக்கிய காரணம், பிரதான இடைத்தரகராக செயற்பட்ட வர்த்தகர் நிஸ்ஸங்க சேனாதிபதி தற்போது கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றமையே ஆகும்.
ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலையை நினைவுகூரும் வகையில், ரஞ்சன் ராமநாயக்கவின் நண்பர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களால் பாரியளவிலான விளம்பரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறித்து அரசாங்கம் அதிருப்தியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில் சில இணக்கப்பாடுகள் காணப்பட்ட போதிலும் பெப்ரவரி 04ஆம் திகதி அது நடைபெறாது என இடைத்தரகர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் எங்களிடம் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், ரஞ்சன் ராமநாயக்க மன்னிப்பு வழங்கப்படுவாரா இல்லையா என்பது இன்னும் சில மணித்தியாலங்களில் தெரியவரும்.