டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் பேரவையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மேற்கொள்ளும் நிலைப்பாடு தொடர்பில் கடும் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க வேண்டும் என்று அந்தக் குழுவின் ஒரு சிலரால் கொண்டுவரப்பட்ட பிரேரணையை பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்ததையடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்நிலைமையின் அடிப்படையில் அந்த அணியின் ஒரு குழு சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்கவுள்ளதுடன் மற்றைய குழுவினர் மற்றுமொரு நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது.