“எமது எதிர்கால இளைஞர்களுக்காக” என்ற தலைப்பில் இளைஞர் உரிமைகள் கூட்டமைப்பு இன்று (10) கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிர்ப்பு, புதிய ஊடக ஒழுங்குமுறைச் சட்டத்துக்கு எதிர்ப்பு, இனவாதத்தை ஒழித்தல், பாலஸ்தீனத்தை விடுவித்தல் ஆகிய விடயங்களை முன்னிறுத்தி இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமது உரிமைகளை வென்றெடுக்க வீதியில் இறங்கி சுதந்திரமான எதிர்காலத்திற்காக வாழும் உரிமையை பாதுகாக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
புகைப்படங்கள் – அஜித் செனவிரத்ன