வடக்கு மாகாண ஆளுநர் விடுத்துள்ள விசேட பணிப்புரை!

Date:

யாழில் காணப்படும் அனுமதியற்ற நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதால் டெங்கு நுளம்பு பரவுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

டெங்கு நுளம்பு அதிகம் பரவும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறிப்பாக வடிகான்களில் நீர் தேங்கி நிற்பதால் நுளம்பு பெருக்கம் அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு குறித்த வடிகான்களை சுத்தப்படுத்துவதோடு, வீதி ஓரங்களில் போடப்பட்டிருக்கக்கூடிய நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறும் பொலிசாருக்கு ஆளுநர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் உடன் அமுலாகும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரின் செயலாளளர் மு.நந்தகோபாலன் ஊடாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு சுகாதாரத்தரப்பினர், உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கும் ஆளுநர் ஆலோசனை வழங்கி உள்ளார்.

மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை யாழ் மாவட்டத்தில் காணப்படும் அனுமதி அற்ற நடைபாதை வியாபார நிலையங்களை அகற்றுமாறும் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாளை ஆஜராவதாக ராஜித்த உறுதி

தம்மை கைது செய்வதற்காக கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை இடைநிறுத்த...

பாணந்துறையில் ஒருவர் சுட்டுக் கொலை

பாணந்துறை, அலுபோகஹவத்த பகுதியில் நேற்று இரவு (ஆகஸ்ட் 27) நடந்த துப்பாக்கிச்...

கெஹல்பத்தர பத்மே கைது!

நீண்ட காலமாக செய்திகளில் இடம்பெற்று வரும் பிரபல பாதாள உலகத் தலைவரான...

வைத்தியர் ருக்‌ஷான் பெல்லனாவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட்ட...