எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மலையகத் பெருந்தோட்ட சமூகத்தின் பல பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
மலையக தோட்டத் தொழிலாளர்களின் நலன்புரி மற்றும் ஊழியர் சேமலாப நிதிகள் பல வருடங்களாக வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (12) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சில தோட்டங்களின் பங்குகளை பல்வேறு வர்த்தகர்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தேயிலை விளைச்சலில் 70% க்கும் அதிகமான சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் வழங்குவதாகவும், அரசுக்கு சொந்தமான தேயிலை தோட்டங்கள் குறைந்த பங்களிப்பை வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில் தரிசு காணிகளை பல்வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு பதிலாக தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அந்த தரிசு நிலங்களை வழங்கி அவர்களை தனது அரசாங்கத்தில் தொழில் முயற்சியாளர்களாக்க உள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.