ஐக்கிய மக்கள் சக்தியால் கட்டமைக்கப்படும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கூட்டணியை கட்டியெழுப்ப ஐக்கிய மக்கள் சக்தி பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் ஜனவரி மாத இறுதிக்குள் அந்த பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளது.
எதிர்காலத்தில் ஒன்றிணையும் குழுக்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையாமல் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணையும் என அதன் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் கூட்டமைப்பை வெற்றிகொள்ளக் கூடிய கொள்கை உடன்பாடு கொண்ட குழுக்களே ஒன்று கூடும் எனவும் தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான மொட்டுக் கட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப பாரிய அரசியல் ஒத்துழைப்பு தேவை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியில் பேசப்பட்டுள்ளது.