ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கை மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இருந்து விஜேராம சந்தி வரை பேரணியாக செல்ல முற்பட்ட வேளையிலேயே பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே அமைதியின்மை ஏற்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.
அமைதியின்மையை கட்டுபடுத்துவதற்காகவே பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டதாக செய்தியாளர் கூறினார்.
பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் இன்று அடையாள பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.