ஊழல் குற்றச்சாட்டு காரணமாக சிங்கப்பூர் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன் இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இலஞ்சம் பெற்றமை உள்ளிட்ட 27 குற்றச்சாட்டுகள் சிங்கப்பூர் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இந்த குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்துள்ளார்.
இராஜினாமா செய்வதோடு, கடந்த ஜூலை மாதம் முதல் தற்போது வரை தான் பெற்ற சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகளையும் திருப்பித் தருவதாகவும் தெரிவித்தார்.