ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியை சந்தித்த கிழக்கு மாகாண ஆளுநர்!

0
188

இந்தியாவின் சிறந்த ஆன்மீகத் தலைவரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்து, ஆசி பெற்றதோடு, இலங்கைக்கு ஆன்மீக விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக ரவிசங்கர் குருஜியின் ஆர்ட் ஆஃப் லிவிங் அமைப்பின் மூலம் உதவி வழங்குவது தொடர்பாக இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.

ஆர்ட் ஆஃப் லிவிங் அமைப்பு என்பது ஒரு உலகளாவிய அமைப்பாகும், இது உலகளாவிய மக்கள் தங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல வழிகாட்டுதல் மற்றும் உதவிகளை வழங்குதல் போன்ற சேவைகளை முன்னெடுத்து வருகின்றது.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி வாழ்க்கையின் ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளைப் போதிக்கும் புத்தகங்களை ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு பரிசாக வழங்கினார்.

மேலும் தற்போது கிழக்கு மாகாணத்தில் ஆளுநர் தலைமையில் முன்னெடுத்துச் செல்லப்படும் சேவைகளுக்கு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி பாராட்டுக்களை தெரிவித்ததாக ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here