தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழந்தனர்.
டிஃபென்டர் ரக வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
டிபென்டரில் பயணித்த அபே ஜன பல கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காரில் வந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
நெடுஞ்சாலை நுழைவு வாயில் அருகே உள்ள பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்தது.
இறந்தவர்களின் சடலங்கள் வாகனத்திலும் வெளியிலும் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.