ஹரக்கட்டாவுடன் தொடர்புடையவர் வெல்லம்பிட்டியில் கைது!

0
206

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவனான ஹரக்கட்டா என்றழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்னவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தார் என்ற சந்தேகத்தில், வெல்லம்பிட்டிய ஹல்முல்லை பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

வெல்லம்பிட்டிய ஹல்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், தற்போது சிறையில் உள்ள தனது உறவினருக்கு தனது பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம் அட்டையை வழங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here