ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைக்க முயற்சி

0
255

ஜனாதிபதி தேர்தலை பிற்போட முயற்சிப்பதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அதற்காக சிவில் சமூகத்தின் கைகளைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறுகிறார்.

இதன் கீழ், நிறைவேற்று ஜனாதிபதி பதவியை இல்லாதொழிப்பதற்கான பிரேரணை முதலில் கொண்டு வரப்படும் எனவும், அந்த செயற்பாடுகளை நிறைவு செய்வதற்கு சுமார் ஒரு வருட காலம் எடுக்கும் எனவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் ஜனாதிபதித் தேர்தல் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவே தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சியும் தெளிவாகத் தெரிகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here