Saturday, November 23, 2024

Latest Posts

கிரீன் டீ தரும் சரும அழகு

கிரீன் டீயில் இருக்கும் கேடசின்ஸ் என்னும் பொருள், ஆண்டிபயாடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. இது பாக்டீரியா வளர்ச்சியை கட்டுப்படுத்தி முகப்பரு பாதிப்பையும் குறைக்கும்.
கிரீன் டீ உடல் உள்ளுறுப்பு களுக்கு மட்டுமல்ல வெளிப்புற சருமத்துக்கும் நலம் சேர்க்கக் கூடியது. அழற்சி எதிர்ப்பு, ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டது. இது முகப்பரு மற்றும் எண்ணெய் சருமத்திற்கு நிவாரணம் தரும்.

முகப்பருக்களுக்கு முக்கிய காரணம், சீபம் அதிகபடியாக உற்பத்தியாவதுதான். இது சரும துளைகளை அடைத்து பாக்டீரியாவின் வளர்ச்சியை தூண்டிவிடும். கிரீன் டீயில் இருக்கும் கேடசின்ஸ் என்னும் பொருள், ஆண்டிபயாடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. இது பாக்டீரியா வளர்ச்சியை கட்டுப்படுத்தி முகப்பரு பாதிப்பையும் குறைக்கும்.

முகப்பருவை குணப்படுத்தலாம்
இரண்டு கிரீன் டீ பேக்குகளை கத்தரித்து வெதுவெதுப்பான நீரில் கலக்கவும். பிறகு அந்த கிரீன் டீ தூளை ஐந்து நிமிடங்கள் ஊறவிடவும். பின்பு அதனை வடிகட்டிக் கொள்ளவும். அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குழைத்து முகப்பரு இருக்கும் பகுதியில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். பின்பு உலர்ந்த துண்டு கொண்டு முகத்தை துடைக்கலாம். வாரம் இரண்டு முறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை உணரலாம்.

வயதான தோற்றத்தைகட்டுப்படுத்தலாம்
முதுமையின் ஆரம்பகால அறிகுறிகளை கவனித்து சரிபடுத்து வதன் மூலம் இளமை பொலிவை விரைவில் இழக்காமல் தக்கவைத்துக்கொள்ளலாம். கிரீன் டீயில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் வயதான தோற்ற பொலிவை எதிர்க்கும் பண்புகளை கொண்டிருக்கின்றன.

இளமையை பராமரிக்கவும், மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை பெறவும் உதவுகின்றன. கிரீன் டீயுடன் தயிரை பயன்படுத்தி வயதான தோற்றத்தை கட்டுப்படுத்தலாம்.

ஒரு டீஸ்பூன் கிரீன் டீ தூளை மிக்சியில் போட்டு நன்றாக பொடித்துக்கொள்ளவும். கிண்ணத்தில் அரை கப் தயிர் ஊற்றி அதனுடன் கிரீன் டீ தூளை சேர்த்து பசை போல் குழப்பிக்கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் உலர விடவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடலாம்.
கிரீன் டீ உடல் நலத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் நல்லது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

ரசாயனங்கள் பயன்படுத்தாமல் இயற்கையான வழிமுறையில் சருமத்தை மெருகேற்றிக்கொள்ள விரும்புபவர்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்றலாம். எனினும் இந்த பொருட்கள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடியது என்பதால் பரிசோதித்து பார்த்துவிட்டு பயன்படுத்துவது நல்லது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.