இலங்கையில் அடிப்படை உரிமைகள் சுதந்திரம் சட்டத்தின் ஆட்சி ஜனநாயக ஆட்சி முறை ஆகியவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய உத்தேச சட்டங்கள் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வொல்க்கெர் டேர்க் தெரிவித்துள்ளார்
இலங்கை தொடர்பான வாய்மொழி மூல அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் போன்றவை ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்துகின்றன. பாதுகாப்பு படையினருக்கு அதிகளவு அதிகாரங்களை வழங்குகின்றன , ஒன்றுகூடல் கருத்து சுதந்திரத்தை கடுமையாக பாதிக்கின்றன எனவும் ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்