81 வயதான டேனிலா என்ற மூதாட்டியின் வயிற்றில் இருந்தே இவ்வாறு குழந்தையொன்றின் எலும்புக்கூட்டை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.
56 ஆண்டுகளாக வயது முதிர்ந்த பெண்ணொருவரின் உடலில் குழந்தையொன்று இறந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ள சம்பவம் பிரேசிலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த மூதாட்டிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளதாகவும், எனினும் அவர் அதனை பொருட்படுத்தாமல் இருந்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் அண்மைக்காலமாக அவர் தீவிர வயிற்று வலியில் துடித்து வந்துள்ளார் எனவும், இதனையடுத்து அவர் வைத்தியர்களை நாடியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த வைத்தியர்கள் அதில் இறந்த குழந்தை ஒன்றின் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து அறுவை சிகிச்சை மூலமாக வயிற்றில் இருந்த குழந்தையின் எலும்புக் கூட்டை வைத்தியர்கள் நீக்கியுள்ள போதும், மூதாட்டி உடலில் ஏற்பட்ட தொற்றுக்காரணமாக உயிரிழந்துள்ளாார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.