கட்சி பிளவுபடுவதற்கு இடமளிக்க வேண்டாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்க அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அனைத்துக் கட்சிப் பிரமுகர்களையும் கேட்டுக்கொள்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க கூறுகிறார்.
“சில அமைச்சர்கள், சில இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பற்றி சிந்திக்கின்றனர். எவ்வாறாயினும், இந்நேரத்தில் நாட்டின் பொருளாதாரத்தை ஒரு குறிப்பிட்ட நிலைக்கு கொண்டு வருவதற்கு ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய பங்களிப்பை எவராலும் மறக்க முடியாது. கட்சி பூஜ்ஜியமாக வீழ்ந்து சாம்பலாகவும் புழுதியாகவும் மாறிவிட்டது.
எனவே, கட்சியின் பெயரால் நாடாளுமன்றத்தில் சில பதவிகள், அமைச்சுப் பதவிகள், இராஜாங்க அமைச்சுப் பதவிகளைப் பெற்ற எமது கட்சியின் சகோதர, சகோதரிகளுக்கும், அனைத்துப் பதவி வகிப்பவர்களுக்கும் நான் கூறுகின்றேன்.
கேள்வி – வேட்பாளரை தீர்மானிக்கும் அதிகாரம் மஹிந்தவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் நல்ல முடிவை எடுப்பாரா?
“ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதன் அகலத்தையும் ஆழத்தையும் நன்கு புரிந்துகொண்டுள்ளார். யோசித்த பிறகு அவர் சரியான முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன்” என்றார்.
கேள்வி – உங்களுக்கு எப்போது அமைச்சுப் பதவி கிடைக்கும்?
“ஓ, எனக்குத் தெரியாது. நான் கேட்கவில்லை, சொல்லவில்லை. அதைப் பற்றி எனக்குக் கவலையும் இல்லை.”
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.