கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது தொடர்பில் ஆனந்தசங்கரி கருத்து!

0
195

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பொன்றை இன்று வியாழக்கிழமை (18) மேற்கொண்டிருந்தார்.

அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;

இந்திரா காந்தி கச்சதீவை இலங்கைக்கு கொடுத்தது சரியானது. பிழையான விடயத்தை இந்திராகாந்தி செய்யமாட்டார். ஆரம்பத்தில் கச்சதீவை ஒருவரும் தேடவில்லை ஆரம்பத்தில் இலங்கை நெடுந்தீவு மீனவர்களும் இந்திய மீனவர்களும் சென்றுவருவது வழமை இந்த தீவு சிறிமாவோ காலத்தில் கச்சதீவு விடுதலைப்புலிகளால் பாதிப்பு என்ற கருத்தை சிறிமாவோ இந்தியப்பிரதமரிடம் கோரிக்கையாக விடுத்தபோதே கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது.

பொதுவேட்பாளர் என்று சொல்பவர்கள் 2004ஆம் ஆண்டு 26ஆசனங்கள் வைத்திருந்தபோது இனப்பிரச்சனையை தீர்த்திருக்க முடியும் மக்கள் இறக்கின்ற போது வாய் திறக்காதவர்கள் இப்பொழுது பொதுவேட்பாளர் பற்றி கதைக்கின்றனர்- என்றாற்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here