வடக்கு சென்று மே தின மேடையில் மனோ விடுத்த அறிவிப்பு

Date:

பொது வேட்பாளர் விஷயத்தில் தென்னிலங்கை தமிழர்களை சேர்க்காதீர்கள். அது வேறு தளம். இது வேறு தளம் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி இன்று இடம்பெற்ற தமிழ்  தேசிய மே நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

சஜித் பிரேமதாச, என் முன்னிலையில் வடகிழக்கு  சிவில் சமூக பிரதிநிதிகளிடம் 13ஐ முழுமையாக அமுல் செய்வேன் என கூறி அதை தன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடமபெற செய்வதாக உறுதி அளித்தார். ஏனைய பிரதான சிங்கள வேட்பாளர்கள் ரணில், அனுர ஆகியோரிடம் தமிழர்களுக்கான தீர்வை தங்கள் தேர்தல் விஞ்ஞாபனங்களில் பிரசுரிக்க சொல்லுங்கள்.

ஜனாதிபதி தேர்தலை பொது வாக்கெடுப்பாக  கருதி வடக்கு கிழக்கில் பொது வேட்பாளரை நிறுத்த தமிழ் கட்சிகளுக்கு உரிமை உண்டு. ஆனால் கடைசி நேரத்தில், ஒரு  பெரும்பான்மை வேட்பாளருக்கு 2ம் விருப்பு வாக்கு கொடுக்கலாம் என விக்கினேஸ்வரன் எம்பி சொல்வது, சந்தேகங்களை ஏற்படுத்தி, பொது வேட்பாளர் கோஷத்தை மலினப்படுத்துகிறது. ஆனால் பொது வேட்பாளர் விஷயத்தில் தென்னிலங்கை தமிழர்களை சேர்க்காதீர்கள். அது வேறு தளம். இது வேறு தளம்.

நான் வரலாறு முழுக்க மலையகத்தில் உரிமைக்கு குரல் கொடுத்து, வடகிழக்கில் உறவுக்கு கரம் கொடுத்துள்ளேன். அதனால் கரம் கொடுக்க இன்று கிளிநொச்சி வந்தேன். இன்று வடகிழக்கில் பெரும் சவால் இளைய தமிழ் தலைமுறை நாட்டை விட்டு வெளியேறுவதாகும். இதனால் தமிழர் ஜனத்தொகை குறைகிறது.

கடந்த காலங்களில் மலையக தமிழர்கள் கிளிநொச்சி, முல்லை, வவுனியா, மாவட்டங்களில் வந்து குடியேறினார்கள். அன்று அவர்கள் இங்கே வராமல் இருந்திருந்தால் இன்று தமிழர் ஜனத்தொகை கணிசமாக குறைந்து இருக்கும் என்பதை எண்ணி பாருங்கள். இனிமேல் மலையக தமிழர் இங்கே வந்து குடியேற மாட்டார்கள். அங்கே அவர்களுக்கான கட்டமைப்பை தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்படுத்தி வருகிறது. ஆகவே தமிழர் ஜனத்தொகை குறையாமல் பாதுகாத்து கொள்ளுங்கள்.

இன்று தமிழரசு கட்சியின் நிலைமையை கண்டு கவலை அடைகிறேன். நீங்கள் இங்கு பலமாக இருந்தால் தான் நாம் அங்கே பலமாக இருப்போம். இதை நான் 20 வருடங்களுக்கு முன் இங்கு வந்து சொன்னேன். 10 வருடங்களுக்கு முன் இங்கு வந்து சொன்னேன். இன்றும் சொல்கிறேன் என மனோ கணேசன் கூறியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...

விமலுக்கு பிடியாணை

நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச...

இதுவரை 465 பேர் பலி

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...