டயானா கமகே பிணையில் விடுதலை

0
173

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 20ஆம் திகதி இரகசிய பொலிஸாரால் சந்தேக நபராக பெயரிடப்பட்ட டயானா கமகே, புலம்பெயர்ந்தோர் மற்றும் குடியேற்றவாசிகள் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாகவும் தம்மை கைது செய்ய உள்ளதாகவும் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

சந்தேகநபர் குற்றத்தைச் செய்ததாக ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டு நீதிமன்றத்திற்கு வந்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு எழுத்து மூலம் அறிவித்ததையடுத்து, அவர் நீதிமன்றில் ஆஜரானார்.

இரகசியப் பொலிஸார் எழுத்துமூல அறிவித்தல் வழங்கியிருந்த போதிலும், நீதிமன்றில் ஆஜராகிய டயானாவை நீதவான் தனது உத்தரவைப் பிறப்பித்து சந்தேக நபரை பிணையில் அனுப்பினார்.

5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல உத்தரவிட்ட நீதவான், தரப்பினருக்கும் சட்டத்தரணிகளுக்கும் பாதகமான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என சந்தேக நபரை கடுமையாக எச்சரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here