டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்படும் முக்கிய சந்தேகநபர்

0
142

சர்வதேச போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர் என நம்பப்படும் பாதாள உலக தலைவரான நதுன் சிந்தக என்ற ஹரக் கட்டாவின் மைத்துனர் மிதிகம ருவன் இன்று (30) நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளார்.

அவர் தற்போது டுபாய் பொலிஸாரின் காவலில் உள்ளதாகவும், அவரை அழைத்து வருவதற்காக கொழும்பு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் குழுவொன்று துபாய் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ள குற்றவாளிகள் பட்டியலிலும் இவரது பெயரும் உள்ளதாக பொலிஸ் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

டுபாய் பொலிஸாரின் காவலில் உள்ள அவர் இன்று நாட்டுக்கு அழைத்து வரப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here