மைத்திரியின் குற்றச்சாட்டை நிராகரித்த கத்தோலிக்க திருச்சபை

0
180

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு பல்வேறு நிறுவனங்கள் வழங்கிய நிதி உதவி பாதிக்கப்பட்டவர்களை சென்றடையவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்தை இலங்கை கத்தோலிக்க திருச்சபை நிராகரித்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க பெறப்பட்ட பணம் தொடர்பாக முழுமையான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், தகவல்களை யார் வேண்டுமானாலும் சரிபார்க்கலாம் என்றும் செய்தியாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த பேராயர் கர்தினால் மெல்க்கம் ரஞ்சித் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு ஏற்கனவே திருச்சபை 500 மில்லியன் ரூபாயினை வழங்கியுள்ளது என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை ஜூட் கிருசாந்த தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here