ஹிருணிகாவுக்கு நீதிமன்றில் ஏமாற்றம்

Date:

மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று அறிவித்தார்.

இந்த பிணை கோரிக்கை இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.

இந்த கோரிக்கை தொடர்பில் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க சட்டமா அதிபர் எதிர்பார்ப்பதாக அரசாங்க சட்டத்தரணி தெரிவித்தார்.

ஆட்சேபனைகளை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டது.

இதன்படி, சட்டமா அதிபருக்கு ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க அனுமதித்த உயர் நீதிமன்ற நீதிபதி, பிணை கோரிக்கையை எதிர்வரும் 11ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறும் உத்தரவிட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு அனுப்பிய பணத்துக்கும் ஆப்பு!!

இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000...

NPP ஆட்சியிலும் ஊழல் – உறுப்பினர் பதவி விலகல்!

குருநாகல் மாநகர சபையில் நிலவும் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு...

வித்யா கொலை வழக்கில் நான்கு பேருக்கு மரண தண்டனை உறுதி

யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கடந்த...

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் எங்கே..?

மத்திய வாங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ளாரா...