“ஜனாதிபதி வேட்பாளராக காத்திருக்கிறேன்” – தம்மிக்க பெரேரா

0
230

நாட்டின் மிகப்பெரும் அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரின் முடிவுக்காக காத்திருப்பதாகவும், அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல வர்த்தகருமான தம்மிக்க பெரேரா இன்று (5) காலை தெரிவித்துள்ளார்.

கொழும்பு 7, ரொஸ்மீட் பிளேஸில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிபுணத்துவ நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி வேட்பாளர் பதவியை எதிர்பார்த்து செயற்படுவதாக தெரிவித்த அவர் தேர்தலில் வெற்றியீட்டுவதற்காக செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

தற்போது நாட்டில் 44 வீதமானவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கவில்லை எனவும், மேடைகளில் எவ்வளவு பெரிதாக பேசினாலும் பொருளாதாரத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்று எவரும் கூறுவதில்லை எனவும் அவர் கூறினார்.

தாம் மேடைக்கு வந்தால் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தை தான் கூற வேண்டும் எனவும், சில அரசியல் கட்சிகள் ஜனாதிபதி தேர்தலுக்காக இரண்டு வருடங்களாக பிரசாரம் செய்து வருவதாகவும் தம்மிக்க பெரேரா தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை அவர்கள் விளக்கவில்லை.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் எதிர்வரும் 90 நாட்களில் பொருளாதாரத்தை எவ்வாறு கட்டியெழுப்புவது என கூற வேண்டும் எனவும், பொருளாதாரத்தை எவ்வாறு கட்டியெழுப்ப வேண்டும் என்பதை மக்களுக்கு கூறும் போது மக்கள் சுயபலம் பெறுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here