திருகோணமலை மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் மக்கள் 70 வருடமாக எதிர்நோக்கி வரும் காணிப்பிரச்சினைகளை பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கோரிக்கையின் பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தீரத்து வைத்துள்ளார்.
காணி உரிமைகள் அற்ற 157 குடும்பங்கள் அனைத்து நம்பிக்கைகளையும் இழந்து தற்காலிக இருப்பிடங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
இது தொடர்பில் ஆளுனரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட போது, முன்னுரிமை நடவடிக்கையாக நிரந்தர தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்து தற்போது காணி உரிமைகளை வழங்கி வைத்தார் ஆளுநர் செந்தில் தொண்டமான்.
இந்நிகழ்வில் பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் மதிவாணன், முன்னாள் பிரதேச செயலாளர் தனேஸ்வரன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.