திருகோணமலை – திருக்கோணேஸ்வர ஆலயத்தில் இருந்து திருடப்பட்ட பலநூறு கோடி ரூபாய் பெறுமதியான தாலி தொடர்பில் பொலிஸ் விசாரணைகளுக்கு மேலதிகமாக இரகசிய பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்கள விசேட விசாரணை பிரிவு ஆழமான விசாரணைகளை முடக்கிவிட்டுள்ளது.
ஆலயத்திற்கு வரும் வழிகள் மற்றும் ஆலய சுற்றுவட்டாரத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை பரிசோதிக்க விசாரணை பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
திருகோணமலை – திருக்கோணேஸ்வர ஆலயம் தொல்பொருள் திணைக்கள பாதுகாப்பு வளாகத்தில் அமைந்துள்ளதால் அந்த திணைக்களத்தின் இரகசிய விசாரணை பிரிவு தாலி திருடிய சந்தேகநபர்களைத் தேடி வலைவீசி வருகிறது.
இந்த திருட்டு சம்பவத்தில் எவரேனும் கையும் களவுமாக பிடிபட்டால் அவருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு பிணையில் வெளியே வர முடியாத நிலை ஏற்படுவதுடன் சதாகாலமும் சிறையில் கடூழிய தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்.
தாலி திருடிய நபரை மிக விரைவில் கைது செய்ய எதிர்பார்ப்பதாக விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.