“பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது” – டில்வின் சில்வா

0
150

பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாட்டில் விகிதாசார வாக்களிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் அரசியல் கட்சியொன்றுக்கு கிடைத்த அதிகூடிய ஆசனங்கள் இதுவாகும்.

225 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி 159 இடங்களைக் கைப்பற்றியது.

வெற்றியின் பின்னணியில் உள்ள அனைவருக்கும் தனது கட்சியின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், விசேடமாக வடக்கு மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here