சி.ஐ.டியில் முன்னிலையான ஹரின் பெர்னாண்டோ!

0
216

சர்ச்சைக்குரிய தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவத்திற்கு அப்போதைய அமைச்சரவை பொறுப்பு கூறவேணடும் என தாம் நம்பவில்லை என முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்குவதற்கு இன்று (22) வந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய தடுப்பூசி கொள்வனவு செய்வதற்காக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சமர்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரம் தொடர்பில் அப்போதைய அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான 18 அமைச்சர்களிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கடந்த 11ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் அறிவித்தது.

இதன்படி, தரமற்ற தடுப்பூசி மருந்துகளை கொள்வனவு செய்வது தொடர்பான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட புலனாய்வு பிரிவு 01 இல் ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர்களான ரமேஷ் பத்திரன, ரொஷான் ரணசிங்க, பிரசன்ன ரணதுங்க மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

ஹரீன் பெர்னாண்டோவைத் தவிர ஏனைய குழுவினர் நேற்று (21) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வந்து வாக்குமூலங்களை வழங்கியதுடன், ஹரீன் பெர்னாண்டோ இன்று ஆஜராகியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், இதற்கு கடந்த அமைச்சரவை பொறுப்பு கூற வேண்டும் என நான் நம்பவில்லை, ஏனென்றால் ஒரு நாளைக்கு குறைந்தது 60, 70 ஆவணங்கள் அமைச்சரவையில் வருகின்றன.

பொதுவாக அந்த அமைச்சுக்களின் செயலாளர்கள் அவற்றை தயாரித்து வழங்குவார்கள்.

அமைச்சர் அதனை அமைச்சரவையில் முன்வைப்பார். முன்வைத்த பின்னர் நிதி அமைச்சகம் பரிந்துரைக்கும். இது சாதாரணம்.

இருப்பினும், நீதிமன்றத்தை மதித்து எங்களுக்குத் தெரிந்ததைச் சொல்வோம் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here