Monday, November 25, 2024

Latest Posts

வெள்ள அனர்த்தத்தை எதிர்கொள்வதற்கானமுக்கிய அறிவுறுத்தல்கள்  – யாழ். மாவட்ட செயலகம் வெளியீடு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்துக்கு முகம் கொடுத்தல் தொடர்பாக மாவட்ட அரச அதிபரால் பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடி முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அவை வருமாறு:-

1. வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்படக்கூடிய இடங்களை அடையாளப்படுத்தி முன்னாயத்த நடவடிக்கைகளை எடுத்தல்.

2. வெள்ள அனர்த்த ஆபத்து காரணமாக வதிவிடங்களை விட்டு வெளியேறும் மக்கள் தற்காலிக தங்குவதற்கான தங்குமிடங்களைத் தயார்படுத்தல்.

3. தற்காலிக தங்குமிடங்களில் தங்குவோருக்குச் சமைத்த உணவு வழங்க நடவடிக்கை எடுத்தல்.

4. மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளுதல்.

5. ஆபத்தான மரங்கள் அல்லது கிளைகள் ஏற்கனவே அகற்றப்பட்டதற்கு மேலதிகமாக, மேலும் இனங்காணப்பட்ட ஆபத்தான மரங்கள் அல்லது கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுத்தல்.

6. ஆபத்தான பனை மரங்களை அகற்றுவதற்குச் சம்பந்தப்பட்ட பிரிவுக்குரிய பனை, தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்துக்கு எழுத்து மூலம் அறிவித்து அகற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்தல்.

மேலும் 24 மணி நேரம் இயங்கும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் தொலைபேசி இலக்கங்களுக்கு (0773957894 /0212221676 /0212117117 மற்றும் 117) பொதுமக்கள் அனர்த்தம் தொடர்பாக தகவல்களை வழங்குமாறும் அரச அதிபர் அறிவித்துள்ளார் என்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.