தேர்தல் நடத்துவது குறித்து அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
2018 ஆம் ஆண்டு தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த வருடம் ஜனவரி மாதத்துடன் முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஒரு வருடத்திற்கு அரசாங்கத்தினால் நீடிக்கப்பட்டது.
இதேவேளை, பொதுத் தேர்தல் தொடர்பில் அரசியல் களத்தில் வதந்திகள் பரவி வருகின்ற நிலையில், மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவை நடைபெறவுள்ள சூழலில் அரசாங்கம் இதற்கு முன்னர் பல தடவைகள் வாக்குறுதியளித்தபடி விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
மாகாண சபைத் தேர்தல்கள் ஏப்ரல் மாத இறுதியிலோ அல்லது மே மாத தொடக்கத்திலோ நடைபெற வாய்ப்பு உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.