சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி அனில் ஜாசிங்கவை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நியமித்துள்ளார்.
இது தொடர்பான நியமனக் கடிதம் இன்று (10) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் கலாநிதி அனில் ஜாசிங்கவிடம் வழங்கி வைக்கப்பட்டது.