குற்றச்சாட்டுக்கள் காரணமாக அசோக ரங்வல சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்தமை பாராட்டத்தக்கது என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆனால் மேலும் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகிவரும் அரசாங்கத்தின் ஏனைய உறுப்பினர்கள் கல்வித் தகுதியை நிரூபிக்கத் தவறினால் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் சுத்தமான நாடாளுமன்றத்தை உருவாக்குவதாக கூறினார். ஆனால், அதே கட்சியை சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கல்வித் தகுதி குறித்து மக்களை தவறாக வழிநடத்தியமை மிகவும் வருத்தமளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.