அரிசியை அதிக விலைக்கு விற்பனை – 342 சுற்றிவளைப்புகள்

0
263

பண்டிகைக் காலத்தில் கட்டுப்பாட்டு விலைக்கு அரிசி விற்பனை செய்யாமை தொடர்பில் 342 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த 17ஆம் திகதி முதல் இன்று (16) வரை இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக குறித்த அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் குறிப்பிட்டார்.

அதன்படி, குறித்த சுற்றிவளைப்புக்களில் 6க்கு நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றின் ஊடாக 7 ​​இலட்சம் ரூபா தண்டப்பணமாக அறவிடப்படுவதற்கான தீர்ப்பு கிடைத்துள்ளது.

ஏனைய சுற்றிவளைப்புகள் தொடர்பாகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற தீர்ப்புகள் பெறப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here