கொழும்பு கொட்டாஞ்சேனை கல்பொத்த சந்தி பகுதியில் இன்று (21) இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது, இதில் ஒருவர் உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தற்போது அந்தப் பகுதியை விட்டு தப்பிச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கிராண்ட்பாஸ் பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளனர்.