இன்று சிவராத்திரி தினமாகும். உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்கள் இன்று சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.
இன்று இரவு சகல ஆலயங்களிலும் சிவபெருமானுக்கு நான்கு ஜாம பூஜைகள் நடைபெறும். நள்ளிரவு 12 மணிக்கு லிங்கோற்பவ பூஜை நடைபெறும். சில ஆலயங்களில் கலை நிகழ்வுகளும் நடைபெறும்.
இரவு முழுவதும் கண் விழித்து உபவாசம் இருந்து இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். இரவு முழுவதும் கண் விழித்து 4 காலமும் பூஜை செய்ய முடியாதவர்கள் குறைந்த பட்சம் லிங்கோற்பவ காலத்தில் மட்டுமாவது கண்விழித்து பூஜை செய்யவேண்டும்.
அதிகாலையில் ஆலயத்தில் நடைபெறும் பூஜையைத் தொடர்ந்து உணவருந்தி விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.