ஏழு கோள்களும் ஒரே அணிவகுப்பில் தென்படும் அரிய சந்தர்ப்பத்தை பார்வையிடும் வாய்ப்பு, இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த அரிய காட்சியை நேற்று (25) முதல் எதிர்வரும் (28) வரை சூரிய அஸ்தமனத்தின் பின்னர் பார்வையிட முடியுமென, கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்வெளி அறிவியல் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் காட்சியின் போது, புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்கள் வெற்றுக் கண்களால் அவதானிக்கும் வகையில் பிரகாசமாகத் தென்படும்.
பூமியைத் தவிர சூரியக் குடும்பத்தின் அனைத்துக் கோள்களும் இந்தக் காலகட்டத்தில் பொதுவான பாதையில் செல்வதைக் காணலாம் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
எனினும், நெப்டியூன், யுரேனஸ் ஆகிய கோள்களை தொலை நோக்கியினுடாக பார்வையிடுவதற்கும் சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
2025 ஆகஸ்ட் சூரியன் உதிக்கும் முன்,நான்கு கிரகங்கள் ஒரே நேரத்தில் தெரியும்.
இதன்போது மற்றொரு கோள்கள் அணிவகுப்பு உருவாகும் என்றும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.