ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல் குழு கூட்டம் நேற்று (மே 09) பிற்பகல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
இதற்கு கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கினார்.
தற்போதைய அரசியல் நிலைமை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் பிரதேச சபை மற்றும் நகர சபை பதவிகளுக்கு பொருத்தமான வேட்பாளர்களை நியமிப்பது மற்றும் அந்த சபைகளில் அதிகாரத்தை நிறுவுவதற்கான ஆதரவு குறித்து கலந்துரையாடப்பட்டதாக கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.