கண்டி, அலதெனிய, யடிஹலகல பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து நேற்று (மே 12) இரவு நிகழ்ந்தது, இதில் 29 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
குருநாகல், கல்கமுவ பகுதியில் இருந்து வெசாக் பண்டிகையை முன்னிட்டு வந்த ஒரு சிறிய பேருந்து, யடிஹலகல வழியாக குருநாகல் நோக்கிச் சென்றபோது, சாரதியால் பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல், வளைவில் சறுக்கி விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள் பாரிகம, கண்டி மற்றும் பேராதனை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.