சிறுமியின் கையில் இருந்த பொம்மைக்குள் போதை பொருள்

Date:

பொம்மை ஒன்றுக்குள் மறைத்து வைத்து சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண் ஒருவரை சீதுவ பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். 

சீதுவ ராஜபக்ஷபுர பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையினரால் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் தனது குழந்தையைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், கேரள கஞ்சா மற்றும் ஒரு மின்னணு தராசு ஆகியவற்றை குழந்தையின் பொம்மைக்குள் இருந்து பொலிஸார் கண்டுபிடித்தனர். 

அதற்கமைய, குறித்த பெண்ணின் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல ஐஸ் பெக்கட்டுக்களையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். 

அந்தப் பெண் தனது 8 வயது குழந்தைக்கு பொம்மையைக் கொடுத்து, குழந்தையுடன் கொட்டாஞ்சேனையில் இருந்து சீதுவ பகுதிக்கு போதைப்பொருட்களைக் கொண்டு வந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர். 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இ.தொ.கா தலைவர் உள்ளிட்ட குழு ஜப்பான் தூதுவரை சந்தித்து பேச்சு

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ ஐசோமாட்டா (Akio ISOMATA) நுவரெலியாவிற்கு...

பொரளை விபத்துக்கு காரணம் கஞ்சா!

பொரளை, கனத்த சந்தியில் இன்று (28) காலை ஏற்பட்ட விபத்து தொடர்பாக...

மூன்று பொலீசார் பணி நீக்கம்

மருதானை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம்...

பொரளை விபத்தில் ஒருவர் பலி

பொரளை பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர்...