இ.தொ.கா பிரதிநிதிகள் இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடல்

Date:

நுவரெலியாவுக்கு வருகை தந்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் வரவேற்றனர்.

அத்துடன், இரு தரபினருக்கும் இடையில் விசேட சந்திப்பும் இடம்பெற்றது.

இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும், நிதிச் செயலாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன், பிரதி தவிசாளர் ராஜதுரை, இலங்கைகக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய குழுவினர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதன்போது இ.தொ.காவின் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் பிரதி தலைவர்கள் இந்திய உயர்ஸ்தானிகருக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.

மலையகத்தில் இந்திய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வேலை திட்டங்கள் குறித்தும் அவற்றின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் வேலை திட்டங்கள் குறித்து இ.தொ.காவால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசபந்துவை பதவி நீக்கும் பிரேரணை நிறைவேற்றம்

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் பிரேரணை மீதான...

BYD சிக்களுக்கு மத்தியில் மேலும் ஒரு வழக்கு!

கொழும்பில் சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட “கனவுகளின் நகரம் - இலங்கை”...

சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் கைது

இணையம் வழியாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 08 வெளிநாட்டு சந்தேக நபர்களையும், 03...

ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்க ஆய்வு

ராமேஸ்வரம் - இலங்கை தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை துவங்குவதற்கு...