ஜோன்ஸ்டன் குடும்ப சகிதம் மீண்டும் விளக்கமறியலில்

0
44

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.  

சந்தேகநபர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றில் இன்று (23) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

சந்தேகநபரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைக்கேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here