பசிலுக்கு எதிராக களமிறங்கும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் !

Date:

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு வேறு ஒரு அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 31ஆம் திகதி அபயாராமயவில் மஹா சங்கத்தினர் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மரணமடையாதவர்களின் வீட்டிலிருந்து கடுகு விதையை கொண்டு வருமாறு கோதமியிடம் சிசா சொன்னதாக வரலாறு சொல்கிறது. அதேபோன்று  தற்போது வருத்தமடையாத வீட்டில் இருந்து ஒரு கோப்பை நீர் கொண்டு வருமாறு நானும் இந்த அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த நாட்டு அப்பாவி ஏழை மக்களுக்கு இவ்வாறான வலியை ஏற்படுத்த இந்த அரசாங்கம் தயாராக இருந்தால் நாமும் பாத யாத்திரையாக சென்று இந்த அரசாங்கத்தை உடனடியாக அனுப்ப வேண்டிய இடத்திற்கு கொண்டு செல்ல நேரிடும் என்பதனை தயக்கத்துடன் கூற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த அரசாங்கத்தின் நிர்வாகத்தையும் மேற்பார்வையையும் மீண்டுமொருமுறை பொறுப்பேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக செயற்படுவார். நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு வேறு ஒரு அபிவிருத்தி அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும். அதற்கான படிகள் என்ன என்பது தொடர்பில் 31ஆம் திகதி மகா சங்கத்தினர் அபயராமயவில் கலந்து கொண்டு தீர்மானம் எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அரசியல் செயற்பாடுகளை தீர்மானிக்கும் அதிசக்தி வாய்ந்த நபர்களாக மஹா சங்கத்தினர் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரணிலை ஆகஸ்ட் 26 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று கொழும்பு நீதாவான் நீதிமன்றத்தில்...

ரணிலுக்கு ஆதரவாக மைத்திரி வருகை

அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி...

இருளில் நடக்கும் ரணில் வழக்கு!

கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிணை மனு தொடர்பான...

UNP விளக்கம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பிணை...