மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால் பதவி விலகியுள்ளார்.
தனது ராஜினாமா கடிதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“இத்தருணத்தில் அனைத்து அமைச்சர்களும் தமது இராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ள நிலையில், நான் பணியாற்றிய இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து எனது இராஜினாமா கடிதத்தை அதிமேதகு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளேன். #இலங்கை”