மாலையில் இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் -மக்களே அவதானம்

Date:

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை அது இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. (05ஆம் திகதி) தொடந்துவ, அக்குரஸ்ஸ, ரன்ன மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.13 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மோசடி தொடர்பில் LNW வாசகர்களுக்கு எச்சரிக்கை!

அன்புடைய வாசகர்களே, இந்த தொலைபேசி இலக்கத்தில் இருந்து உங்களுக்கு அழைப்பு ஏதும் வந்ததா?...

தங்கம் விலை நிலவரம்

இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் இன்று (04) காலை தங்கத்தின் விலை நேற்றைய...

பிரமாண்ட சொகுசு வீடு! விசாரணை செய்யுமாறு பொலிசில் முறைப்பாடு!!

விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்தவினால் கடுவெல,...

உலக வங்கி – இலங்கை அரசாங்கம் இடையே ஐந்தாண்டு திட்டம் கைச்சாத்து

உலக வங்கி குழுமமும், இலங்கை அரசாங்கமும் இணைந்து புதிய ஐந்தாண்டு கூட்டாண்மை...