கண்கவர் வசந்தகால மலர் கண்காட்சி நுவரெலியாவில்

0
133

நுவரெலியாவில் தற்போது ஆரம்பமாகியுள்ள வசந்தகால நிகழ்வுகளை முன்னிட்டு நுவரெலியா மாநாகரசபை மற்றும் விக்டோரியா பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்ட மலர் கண்காட்சி நேற்று (17) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இம்மலர் கண்காட்சியில் சுமார் 100இற்கும் மேற்பட்ட பங்குபற்றுனர்கள் இணைந்திருந்தனர்.

அரச மற்றும் தனியார் பிரிவுகளிலிருந்து பல போட்டியாளர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர்.இம்மலர் கண்காட்சிப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறுவோருக்கு பணப்பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்க ஏற்பாடு செய்யப்படுள்ளது.

நுவரெலியா மாநகர சபையின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த மலர் கண்காட்சியில் நுவரெலியா மாநகர சபையின் முதல்வர் சந்தனலால் கருணாரட்ன மற்றும் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட உட்பட மாநகர சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here