பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட முழு அரசாங்கமும் பதவி விலகி, இடைக்கால அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அனைவரையும் கவைக்கு உள்ளாக்கும் நிலைமையே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ளது. வீதிகளை மறித்து, பேருந்துகளை தடுத்து நிறுத்தி பொது மக்கள் வீதியில் இறங்கி, நகரங்களை செயலிழக்க செய்யும் நிலைமை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ளது.
நாடு இப்படியான நிலைமைக்கு செல்லும் ஆபத்தை அமைச்சரவையில் இருந்த நாங்கள் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வந்தோம் என்பது தற்போது பின்வரிசைக்கு சென்றுள்ள நாமல் ராஜபக்ச உட்பட அனைவரது மனசாட்சி அறியும்.
நீங்கள் அழைத்து வந்த இரட்டை குடியுரிமை பெற்றவர் அவை அனைத்தையும் புறந்தள்ளி விட்டு,பொருளாதாரம் சிறப்பான இடத்தை நோக்கி செல்கிறது என்ற மாயையான சித்திரைத்தை உங்களுக்கு உருவகித்து காண்பித்தார். நீங்கள், செவிடன், ஊமை போல் அதனை கேட்டு செயற்பட்டீர்கள்.
நீங்கள் செய்த இந்த கருமத்தின் வினை காரணமாவே இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அமைச்சு பதவிகளை வழங்கி விட்டு சிரேஷ்ட உறுப்பினர்களை பின்நோக்கி செல்ல வேண்டிய நிலைமையை உருவாக்கியது.
இரட்டை குடியுரிமை பெற்றவரை அழைத்து வரும் போதே அவர் வெறுமனே வரவில்லை என நாங்கள் கூறினோம். அந்த இரட்டை குடியுரிமை பெற்ற நபர், கழுத்தில் சால்வை அணிந்த எவரும் வீதியில் இறங்கி செல்ல முடியாத நிலைமையை ஏற்படுத்தியுள்ளார்.
தற்போதும் நீங்கள், செவிடன், ஊமைகள் போல் இருந்து வருகிறீர்கள். கடந்த மார் 2 ஆம் திகதி இது பற்றி நாங்கள் நாட்டுக்கு கூறினோம். உள்ளுக்குள் பேசும் போது கேட்கவில்லை.
நாங்கள் அதனை நாட்டுக்கு கூறினோம். 3 ஆம் திகதி என்னையும் கம்மன்பிலவையும் அமைச்சு பதவியில் இருந்து நீக்கினர். மிக்க நன்றி. மார்ச் 3 ஆம் திகதி எங்களை நீக்கினர். ஏப்ரல் 3 ஆம் திகதியாகும் போது, நீங்கள் அனைவரும் உங்களது பதவிகளை இழந்து, அனாதரவாக இருக்கின்றீர்கள்.
இதனால், பிரதமர் உட்பட அனைவரும் பதவி விலகி, இடைக்கால அரசாங்கத்தை அமைத்து நெருக்கடிக்கு தீர்வுகாண வழியை ஏற்படுத்தி கொடுத்து, தயவு அனைவரும் இறங்கி செல்லுங்கள் என கேட்டுக்கொள்கிறோம் என விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.