ரவி பிணையில் விடுதலை

0
166

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கடை பிரதான நீதிவான் நீதிமன்றத்திற்கு இன்று(31) அழைத்துச் செல்லப்பட்ட போது, அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

பல மணி நேர விசாரணையை தொடர்ந்து, நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக அதிகாரிகள் அவரைக் கைது செய்து, பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையிலே அவரை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறைகளுக்கு வெளியே, ஐந்து நபர்கள் தேசிய லொத்தர் சபையில் ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு, பின்னர் முன்னாள் அமைச்சரின் தனிப்பட்ட பணியாளர்களுடன் இணைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்காகவே அவர் அழைக்கப்பட்டு கைதானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here