நீதித்துறையின் சுயாதீனச் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிடாது

0
22

நீதிமன்றத் தீர்ப்புகளை அரசாங்கம் மதிக்கும் என்றும், நீதித்துறையின் சுயாதீனச் செயற்பாடுகளில் தலையிடாது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பதுளையில் இன்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றங்களினால் வழங்கப்படும் இறுதித் தீர்ப்புகளை அரசாங்கம் முழுமையாக மதிக்கும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நீதிமன்றத் தீர்ப்புகளை மாற்றியமைக்கும் வகையில் நிறைவேற்று அதிகாரம் பயன்படுத்தப்படும் என எவரும் எதிர்பார்க்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

நீதிமன்றத் தீர்ப்புகள் தொடர்பான விடயங்களில் அரசாங்கம் சட்டத்தின் அடிப்படையிலேயே செயற்படும் என்பதையும் அவரது கருத்துகள் எடுத்துக்காட்டுகின்றன.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பின்னணியில், இந்தக் கருத்தை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here